(மேல்நிலை முதலாமாண்டு)
சூரியன்
சுட்டெரிக்கும் காலை
முதன்முதலாய்
நீராருங்கடலடுத்த எனப் பாடி
நீண்டுகிடந்த படியேறிச் சென்றோம்
ஒருவர்பின் ஒருவராய் வகுப்பினுள்நுழைந்தோம்
ஒருவரைஒருவர் மகிழ்ச்சியாய் பார்த்தோம்
பார்த்தமாத்திரத்தில் ஒட்டிக்கொண்டனர் சிலர்
பழகியபின் இணைந்துகொண்டனர் பலர்
நாங்கள் மொத்தம் நாற்பதுபேர்
எங்கள் எண்பது கண்களும்
வாசலை நோக்கி பார்க்க
ஆசிரியர் உள்ளே நுழைகிறார்
எங்கள் எண்பது கைகால்களும்
உதறலுடன் அவரை பார்க்க
உணர்வுபூர்வமாய் எங்களை புரிந்துகொண்டு
உரிமையுடன் பேச ஆரம்பித்தார்
பரஸ்பரம் அறிமுகம் முடிவடைந்தவுடன்
பார்வைகளை பரிமாற்றிக் கொண்டோம்
இரண்டு வருட பள்ளி வாழ்க்கையை
இரண்டே நொடியில் திரையிட்டுக்காண்பித்தார்
விளையாட்டு,குறும்பு, போட்டியென
முதல் வருடம் முழுமையாய் ஓடியது
முப்பதுநாள் விடுமுறை கொண்டாட்டம்
நாற்பதுபேராய் இருந்தநாங்கள் நான்கைஇழந்தோம்
(மேல்நிலை இரண்டாமாண்டு)
முதல்வருட விளையாட்டுத்தனம் வீழ்ந்தது
விழிகள் வீறுகொண்டு எழுந்தன
வீணாய் பொழுதை கழிக்காமல்
விழிப்புடன் படிக்க துவங்கினோம்
எங்கள்நட்பு எங்களுக்கு தன்னம்பிக்கைதந்தது
கூட்டாய் கூடி நின்றோம்
குழுவாய் சேர்ந்து படித்தோம்
குறைகளை களைந்து எறிந்தோம்
இறைவன் எங்களுக்குவரம் தரவில்லை
அவரே எங்களுக்கு வரமாய்வந்தார்
ஆசிரியர் எனும் போர்வையில்
ஆளும்கட்சியாய் எங்களை ஆட்கொண்டார்
சரித்திரம், வணிகம், பொருளாதாரமென
நாளொரு மேனியாய் பொழுதுகளோடின
பொறுப்பாய் நாங்கள் படிக்க
தங்கள்நற்பொழுதுகளை தொலைத்தனர் ஆசிரியர்கள்
காலம்கடந்து நாட்கள் நகர்ந்தன
தேர்வுகளும் எங்களை நெருங்கின
நீயா - நானா ? என எதிக்கொண்டோம்
நங்கள் வெற்றியும் பெற்றோம்
எங்கள் பள்ளிவாழ்வின் கடைசிநாளை
நினைக்கையில் கண்கள்வெடித்தன
இருப்பினும் வெற்றியின் மகிழ்ச்சியில்
தலைமை ஆசிரியரை சந்திக்கச்சென்றோம்
நாங்கள் கொண்டுசென்ற இனிப்பில்
நஞ்சை வார்த்து கொடுத்தார்
என்னஎன்ன நானும் சொல்ல
என்இதயமும் விம்மி அழுகிறதே
ஆம்! இனிமேல் எங்களுக்கும் பள்ளிக்கும்
எந்தவிதமான உறவும் இல்லையாம்
அதுஇன்றைய மாணவர்களின் கருவறையாம்
நாங்கள்மீண்டும் உள்செல்ல இயலாதாம்
அய்யஹோ என்னவிது கொடுமை
பனிரெண்டுவருடம் நானும் என்பள்ளியும்
இணைந்து பிணைந்து கிடந்தோமே
இப்போது இவர்கள் எங்களைபிரிக்கிறார்களே !
என் வாழ்வின் இத்தனை ஆண்டுகாலம்
நான் உன்னுடன் வாழ்ந்து விட்டு
இன்று எப்படி உன்னை பிரிவேன்?
என்னால் எப்படி இருக்கமுடியும் ?
என்பள்ளிதான் முற்று புள்ளி
என நினைத்தேன் அனால்
முற்றுபுள்ளி தொடர்ந்து மீண்டும்
ஒரு அத்தியாயமாகிறது கல்லூரியாய்!
தாயின் தொப்புர்க்கொடி அறுந்தவுடன்
தாய் - மகன் உறவு முறிந்துவிடுவதில்லை
அதுபோல நாங்கள்பள்ளியை விட்டுபிரிந்தாலும்
எங்கள் உறவு முறிவதில்லை
எத்தனை ஆறுதல்கள் கூறினாலும்
எங்கள் கண்ணாடி இதயம் உடைந்துவிட்டது
அது மீண்டும் இணைவது சாத்தியமாகாது
வருங்கால கல்லூரி வாழ்க்கை
மருந்தாக அமையுமா? காத்திருக்கிறோம்….!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக