இரங்கற்ப்பா

கன்னித்தீவு
கதையும்
முடிந்துவிட்டது.
ஆனால்,

கண்ணீர்த்தீவாம்
கச்சத்தீவின்
கவலை மட்டும் 
தொடர்கிறது

கடல்தாயின் 
மடியில் பிறந்து
மார்ப்பாலை மறந்து
உவர்க்கும் நீரில் 
உயிர் வளர்த்தவன்

அன்னையின்
அன்பில்
ஆழ்க்கடலுக்குள்
அலைகையில்

காவல் நாய்களின்
கண்ணிவெடியில்
சிக்கி கதறுகின்றனர்

கணவனை
கடலுக்குள் தொலைத்துவிட்டு
கதறும் கண்ணகிகளுக்கு
என்ன பதில்?

அரசாங்கம்
அனுதாபம் 
தெரிவிக்கிறது

பத்திரிக்கைகள்
படம்போட்டு
பணம் சம்பாதிக்கின்றன

கவிஞன்
கண்ணீர் கவிதை
வரைகிறான்

திராவிட
இளைஞ்சனுக்கு
இறங்கர்ப்பாவை
இலவசமாக எழுதிவிட்டு

திரை
இளைஞ்சனுக்கு
வசனம் எழுதிக்கொண்டுருக்கிறார்
திராவிட தலைவர்

அயல் நாட்டு
அரசுடன்
பேச்சுவார்த்தையில்
பேரம் பேசிவிட்ட
இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்

நாம் தான்
ட்விட்டரில் தீட்டி
பேஸ்புக்கில் பேசி
ஒன்றிணைந்து போராடவேண்டும்

இல்லையெனில்
கணவனை
இழந்துக்கொண்டிருக்கும்
பெண்களின் கண்ணீரில்
மீண்டும் ஒரு
சுனாமி நிச்சயம் வரும்