சொந்த வீடு


தாத்தாவின்
தகப்பனார்
தந்த 'தரு '
எங்கள் வீடு

என்
தந்தையும் நானும்
தவழ்ந்து விளையாடிய
வீடு

பெரியவூட்டுக்காரங்க
என்று தான்
எங்கள் முகவரி
துவங்கும்

பழைய வீடு
என்றாலும்
பாரம்பரியம்
குறையவில்லை

சரிந்து கிடக்கும்
ஓடுகளும்
சரித்திரம்
பேசும்

நானும் தங்கையும்
எட்டிபிடித்து முட்டி
மோதிக்கொண்ட
தூண்கள்

அம்மாவின்
அறையாகவே
மாறிப்போன
சமையலறை

பச்சைபோர்வை
போற்றியிருக்கும்
பசுமை
தோட்டம்

ஆயிரமாயிரம்
கதைகள்
பேசிய
வெளிமுற்றம்

இன்று
எல்லாமும்
தூரம்
போகின்றன

விற்றபின்னர்தான்
தெரிகிறது
"சொந்தவீட்டின்
அருமை".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக