இளைஞனே
தீயாய் இருக்கும் வயதில்
ஏன் தீக்குச்சியாய்
இருக்கிறாய்
நீ வெற்றியின்
மைந்தன் - ஏன்
பொருமையாய்
இருக்கிறாய்
தோல்வி என்பது
தோல்வி அல்ல
அது தள்ளி போகும்
வெற்றி!
தோல்வி என்பது
வெற்றியை அறுவடை
செய்ய காத்திருக்கும்
காலம்
வரலாறு எல்லாம்
ரத்தத்தின் வாசம் போல
தோல்வி என்பது
வெற்றியின் வாசம்
வெற்றி என்பது
சரித்திரத்தில் துவங்கி
சகாப்தத்தில் முடியக்கூடிய
ஒன்று
சகாப்தத்தையே
முறியடிக்க கூடிய
இந்திய தாயின்
புதல்வன் நீ !
உனக்குள் இருப்பது
சாதாரண ரத்தம் இல்லை
அது இந்திய தாயின் குருதி
இந்திய ரத்தம்
பொறுமை காத்தது
போதும் தோழா
உடனே
விழித்தெழு!
தோல்வியை
தோகையாக்கி
வெற்றி பறவையின் மீது
பயணம் கொள்.