தனிமை


எந்தன் மனமே
என்னவாகியது உனக்கு
ஏன் இந்த வெறுமை
ஏன் இத்தனை மௌனம்

யாருக்காய் மௌனம் காக்கிறாய்
எதற்காய் வெறுமை அடைகிறாய்
எத்தனை எத்தனை வார்த்தைகள்
ஒருநொடியில் ஒரு நாளில்
இன்று ஒரு வார்த்தையும்
இல்லையே உன்னிடத்தில்
இதயம் கணத்து காண்பது ஏனோ

நான் சேர்த்துவைத்த
மயிலிரகெல்லாம்
ஒரு மழை வெள்ளத்துள்
அடித்து செள்ளப்பட்டதோர்
உணர்வு மனதுக்குள்
நண்பர்கள்
உனை அழவைக்க
முயற்சிக்கும் போதும்
சிரித்து கிடப்பாயே
இன்று யாரும்
எதுவும் செய்யாமல்
அழுகிறாய் ஏனோ
ஒ புரிந்துவிட்டது
தனிமை என்னும்
கொடிய மிருகம்
இப்போது உன்னுடன் சேர்ந்துவிட்டது
நீயும் அந்த மிருகமும்
இப்போது இருளில்
வாழ ஆரம்பித்துவிட்டீர்கள்
அதுதான் இந்த தனிமைக்கு காரணம்
ஏய் மனிதா !
நில் ஒருநிமிடம்
உனை வாசிப்பாய்
சில நிமிடம்
என்ன நடக்கிறது
இந்த பூமியில்
என்ன செய்கிறீர்கள் நீங்கள் ?
ஈரம் இல்லாத
உன்னுடன் வாழ
நான் விரும்பவில்லை
உன்னை விவாகரத்து
செய்கிறேன்
விழிகளை காப்பாற்ற ஏன்
முட்களை காவல் வைக்கிறீர்கள்
மனிதரென்ற மகிமையை
மறந்து வருவதேனோ
உன் பாரத தாயின் மைந்தர்கள்
மண்ணில் புதைக்கப்பட்டாலும்
நீ மனமிரங்குவதில்லை

உன்னடன் பிறந்தவன்
கையேந்தி யாசகம்
செய்யும் போதும் நீ
........

மனிதர்கள் வணங்க
சில விலங்குகள்
இங்கே இருந்தாலும்
விலங்குகள் வணங்க
ஒரு மனிதனும்
இங்கே இல்லை
மனித
சிறப்பெல்லாம்
இறப்பாகிறது...

இப்படிக்கு உன் மனசாட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக