என் அன்பே நான்
உனை நினைத்திருக்கும்
வேளையில் உனக்காக
பிரத்யோகமாக ஒரு கவிதை
எழுத விரும்பினேன்
நான் கவிதை எழுத
கற்றுக்கொண்ட நாளிலிருந்து
கடைசிக் காலம் வரை
என்னுடய தொகுப்பில்
உனை பற்றி எழுதும் கவிதை
தான் சிறப்பானதாக இருக்க விரும்பினேன்
இதற்காய் நான்
இன்னும் கொஞ்சம் காலம்
பொறுத்திருக்கலாம் ஆனால்
எங்கே நான் மறித்து விடுவேனோ என்ற பயம்...
ஒரு வழியாக நான்
எழுத ஆரம்பித்து விட்டேன்
உனக்காக ஒரு கவிதையை
உன் கண்களை பற்றி
எழுத நினைத்தேன்
என் கண்கள் தானாக
மூடி கொண்டன
நீ வைக்கும்
ஒற்றை ரோஜாவும்
என் ரத்தத்தை வற்றி விடுகிறது
உன் சிரிப்பு
எனை சிறை
வைக்கும் போதே
உன் பார்வை
எனை பைத்தியமாக்குகிறது
உனது பெயரென்ன 'ந......'
நந்தவனமாய் நகர்கிறாய்
நதியாய் பாய்கிறாய்
என் நரம்புகளில்
உன்.........
ஐயோ போதும் பெண்ணே
இதற்க்கு மேல்
என்னால் முடியவில்லை
உன் முகத்திலேயே
நான் முழுவதுமாய்
கரைந்தேன்
மேலும் எழுத
எனக்கு இன்னும்
பல காலம் தேவை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக