தோழி


ஏய் பெண்ணே
என்னை என்ன
செய்துவிட்டாய்

ஏன் எனக்குள்
இத்தனை
மாற்றம்

தோழன்
என சிரிக்கிறாய்
உன் சிரிப்பும் எனை
சிறை வைக்கிறதே

கூட்டத்தில் இருந்தும்
தனியாய் உணர்கிறேன்
தனிமையும் உன் பெயரை
தான் தருகிறது


கனவிலும்
கவிதை வரைந்தவன்
இன்று காதல்
கண்ணாமூச்சி ஆடுகிறேன்

பாறையை இருந்த
என்னை இன்று
பறவையாய்
பட்டாம் பூச்சியாய்
பறக்க வைத்தாய்


காதலை
கேலிசெய்தவன் நான்
இன்று உன் கண்ணில்
கேள்வி இன்றி விழுந்தேன்

என் பகலெல்லாம்
பாதி விலைக்கு
விற்றேன்

இராப்பொழுதையும்
இரவல்
கொடுத்துவிட்டேன்

நினைவுகளை
இழுந்து
கனவுகளை காதலிக்குறேன்

சாவிலும்
உன்னுடன் இருக்க
விரும்புகிறேன்

எப்போது கிடைக்கும்
எனக்கு காதலநெனும்
பதவி உயர்வு?

1 கருத்து:

  1. நல்லாயிருக்குங்க... எனக்கும் இந்த மாதிரி ஒரு தோழி உண்டு. உங்களுக்கு உள்ள அதே ஃபீலிங் தான் எனக்கும். ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

    பதிலளிநீக்கு