சுதந்திர இந்தியா

ஆகத்து 14 நள்ளிரவு
கருப்பு பயணம் கண்ணுக்குள்
ஏதோவொரு பாதை தெரிய
நடந்தேன் அதன் போக்கில்

என் பயணம்
என் தேசத்தை சுற்றியது
ஒவ்வொரு மாநிலமாய்
ஒவ்வொரு ஊராய்

எத்தனை வேற்றுமை ?
என் பாரத நாட்டில்!
என் செங்குருதி பீரிட்டு
சிவப்பு வண்ணம் தெளித்தது,

அதனை ஒரு தூரிகையால் தொட்டு
ஒரு சன்னலை வரைந்தேன்
வரைந்த சன்னலின் வழியே
என் தேசத்தை கண்டேன்

இல்லாத பிள்ளைக்காக
செல்வம் சேர்க்கும் குடும்பம்!
இருக்கும் தாய் நோய்க்குமருந்தின்றி
தவிக்கும் குடும்பம்!

இத்தனை நிறங்களா மனிதர்களிலென
பாரதியின் கேள்வி கேட்டது!
வேற்றுமைக்கும்
வேற்றுமை காண்கிறது எந்நாடு

உன் ஓட்டுரிமை கொடு
நான் நாட்டுரிமை பெற்று
உன் வீட்டையாள்கிறேன்
என்கின்றன அரசியல் கட்சிகள்

சட்டையின்றி திரியும்
எனிந்திய குழந்தைக்கு
கொடியும் குண்டூசியும்
தருகிறான் அரசியல்வாதி

மக்கள் சுதந்திரமெல்லாம்
சுதந்திரமாய் போயிற்று
சுதந்திரம் என்ன விலை?
என்று கேட்கிறான் இந்தியன்

விழியில் வழியும்
கண்ணீர் காய்ந்து
விடுதலை விடியல்
எப்போது கிடைக்கும் என் இந்திய தாயே!?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக