பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தோழா நீ துயிலுறங்க
ரோஜா படுக்கையை தர ஆசை தான்
ஆனால் அதில் முட்கள் இருக்கும் என்பதால்
அதனை மறுத்துவிடுகிறேன்
நீ முகம் கழுவ
மேகத்தை உருக்கி
மழயை நீராய் தரத்தான் நினைத்தேன்
ஆனால் மண்ணின் மீது இறக்கமேற்பட்டதால்
அதனையும் மறுத்து விடுகிறேன்
ஏழு அதிசயங்களின்
ஏழு வர்ணம் தொட்டு
உனக்காய் ஒரு அதிசயமாய்
வரைந்து தருகிறேன் ஒரு கவிதையை
என்னுயிர் நண்பனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக