மழை


நீலவானத்தின் பன்னீர் நீ
கருமேகத்தின் கண்ணீர் நீ
உயிர்களின் செந்நீர் நீ
தாகம்தணிக்கும் தண்ணீரும் நீ

தாலாட்டிடும் தாயவள் நீ
தாகம்தீர்க்கும் தவமும் நீ
தாமரையின் தடாகம் நீ
தீயின் தீயவன் நீ

உயிரின் உயிரும் நீ
அணுவின் அணுவும் நீ
புல்வெளியின் புடவை நீ
பூஞ்சோலையின் புருஷன் நீ

நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அசையாது உலகு
வள்ளுவனின் வார்த்தை நீ
இசையின் இசையும் நீ

நீ எப்போது வருவாயென
காத்திருக்கிறோம் எதிர்பார்த்திருக்கிறோம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக