விடுதலையும் விடியலும்


விடிந்தும் விடியாமலுள்ளது
எங்கள் இராப்பொழுது
சுதந்திரம் அடைந்தும்
அடையாமலுள்ளது எங்கள் வாழ்வு

பாரினிலே நல்ல நாடு
பாட்டன் பூட்டன்
பாண்டியன் பல்லவன்
ஆண்ட நாடு

பெருமைக்கெல்லாம்
பெருமையான நாடு
பொறுமையாய் பொழுதை
கழிக்கிறது போதையில்

தேசப்பிதா மகாத்மா
தோழர்கள் தோள்சேர்த்து
தேடித்தந்த சுதந்திரம்
தோல்வியை தேடுகிறது

பாரத தாய்
பாரமாய் மாற
அந்நிய நிறுவனங்கள்
அழகாய் மாறுகின்றன

மீண்டும்
தோன்றுகிறதொரு
அந்நிய
ஏகாபத்தியம்

பயிர் நிலமெல்லாம்
பாழாய் போகிறது
பாலை நிலமெல்லாம்
ஆலையாய் மாறுகிறது

உயிருக்கு உண்டிக்கொடுக்கும்
உழவை உதறித்தள்ளுகிறான்
உரிமை இழந்து உத்தியோகம்
பார்க்கிறான் அந்நிய நிறுவனத்தில்

இளைஞனே
இன்னுமா உன் விழியில் உறக்கும்
வழிகிறது விழியன் வழியில்
பார் உன் பாரத நாட்டை

உன் பாரத தாய்
கண்ணீர் வடிக்கிறாள்
நீ கண்களை மூடிக்
கனா காண்கிறாய்

அன்று வியாபாரியை வந்தவன்
இன்று உற்பதியாளனாய்
மாறிவிட்டன யோசித்துப்பார்
யாருக்கிங்கே வளர்ச்சி

வியாபாரியே
விலை பேசினன்று
இன்று என்ன செய்வான்
உற்பத்தியாளன்

அடிமைப்பட்டு கிடந்த காலம்
ஆழ்மனதுக்குள் உள்ளது
நமக்கு ஆனாலும்
அமைதியாய்...

ஆண்டாண்டு காலம் நம்மை
அடிமையாய் ஆண்ட
ஆங்கிலேயன் மீண்டும் வருகிறான்
அந்நிய நிறுவனமாய்

அன்றாவது நம் தந்தை
மகாத்மா இருந்தார்
இன்று யார் இருக்கிறார்
உன்னையும் என்னையும் தவிர

நாம தான் இந்த நாட்டின்
இரத்தமாய் உள்ளவர்கள்
விழித்தெழுவோம் தோழா
விழிகளில் விதியை மாற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக