இயற்கை


என்னுயிரின் உயிரே
உணர்வின் உணர்வே
உன்னை என்சொல்லி
அழைப்பேன் நான்

"இயற்கை" எனும்
ஒற்றை சொல்
போதுமோ
உன்னை பற்றி கூற

நீ என்ன
அட்சய பாத்திரமோ
அள்ளிகொடுப்பதில்
உனக்கினை யாரிங்கே

மண்ணாய் இருந்த
உன்னை நாங்கள்
தோண்டி காயப்படுதினோம்
மரமாய் காற்றளித்தாய்

காற்றாய் மாறினாய்
காற்றாலை வைத்து
காயப்படுத்தினோம் கரங்களை
கலங்காமல் உள்ளாய்

கடலாய் மாரினை
காலம் காலமாய்
மீன்களை எடுத்தோம்
பதிலாய் முத்தையும் தந்தாய்

எடுக்க எடுக்க
குறைவில்லாமல்
இல்லை என்பது
இல்லை என்கிறாய்

காலம் தவறாது
கடமை செய்கிறாய்
சூரியனாய் சந்திரனாய்
தோற்றம் மாறுகிறாய்

ஒருநாளும்
கடமை தவறாமல்
கன பொழுதும்
கருத்தாய் உள்ளாய்

நான்
சுவாசிக்கும் சுவாசமே நீ தான்
ஒரு நாளும் உன்னிடம் பேசுவதுமில்லை
உன் விலாசம் விசாரிப்பதுமில்லை

ஏய் காற்றே
நீ எங்கிருந்து வருகிறாய்
எதற்க்காய் எனை
சுவாசிக்கிறாய் என

ஒருநாளும் உன்னை
நான் ஆரத்தழுவியதில்லை
இருந்தும் என் மீது
அன்பு கொண்டுள்ளாய்

உனைப்பற்றி எழுதும்
இந்த காகிதம் விஞ்ஞானமாய்
இருந்தாலும் நீ தான்
இந்த உலகின் மெய்ஞானம்

உன்னை எப்போதும்
நாங்கள் பிரியமாட்டோம்
எங்களின் இயற்கை
'இறைவனே'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக