கடத்தல்


என் காதலனே நீ
எங்கே இருக்கிறாயடா
உணன்பு முகம்
எனை உரிய வைக்கிறதே

பாவிகள் ஏனோ கடத்தினார்கள்
நீ வந்த விமானத்தை
பாக்தாக் நகருக்குள் பதுங்கிவிட்டதோ
பதில் சொல்லடா

யாருன்னை எங்கே
அடைத்து வைத்துள்ளார்கள்
அவன் முகம் நினைவிருக்கிறதா இல்லை
எந்தன் முகம் மட்டும் நினைவிருக்கிறதா

ஆகாயம் அவனேங்கேவென
எனை கேட்கும்போது
அழுகை மட்டுமே
எனை ஆட்கொள்கிறது

எனை கேட்பவரிடம்
உன் பெயரை ஊரை கூட
என்னால் சொல்ல
முடியவில்லை

இன்று என்ன நாள்
என்ன நேரம் வானிலை
எல்லாம் தெரியுமோ உனக்கு
இல்லை எனக்கு மட்டும் தான்.....

எத்தனை பேர் வந்தார்கள் இங்கே
எத்தனை முகங்கள்
என்னெதிரே உன்னை தவிர
உந்தன் முகமெங்கே எனக்குள்ளே தேடி பார்க்கிறேன்

எந்தன் அழுகை நதியே
எனை விடு என் காதலனை
சந்திக்க
நீ தேவையில்லை

எனை நான் இழந்தாலும்
உன் ஆன்மா
எனை காப்பாற்றுகிறது
கடவுளை போல

நம் இரவுகளெல்லாம்
பதிலில்லாமல் கழிகிறது
கனவெல்லாம் காற்றோடு
கரைகிறது

எனக்கு இப்போது வயதாகிவிட்டது
என் தந்தையை விட
அதிக அனுபவமே
உள்ளது என்னிடத்தில்

நினைவுகளை நிஜமாய்
நினைத்து
நினைத்து
நம் காலங்கள் கடக்கின்றன

உன்னை பற்றி
வந்த செய்திகள்
நம் வாழ்வின் நிஜங்கள்
நினைவுகளாய் உள்ளது

என்னிடம் இருந்த உன் ஒற்றை
புகைப்படமும் சிதைகிறது
சிதையும் புகைப்படத்துடன்
சிதைந்த என் உயிரும் கடத்தபடுகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக