கல்லூரி

நான் கருவறையில்
கிடந்த காலம்
மிக சிறியது
பத்து மாதம்

நான் கல்லறையில்
கிடக்க போகும் காலம்
மிகப் பெரியது பல மாதம்
அனால் ஏனோ
என்கல்லூரி வாழ்க்கை மட்டும்
சரியாய் அளந்து
மூன்று ஆண்டுகள்

சில நேரம்
இது மூன்று நொடியாய்
மூன்று யுகமாய்
மாறுவது நண்பர்களை பொருத்து

என் பள்ளி வாழ்க்கை
சொல்லி முடிப்பதற்குள்
நினைவுகள்
கண்கள் வெடிக்கின்றன

மாற்றத்திற்கு மருந்தாய்
கனவிற்கு கருவாய்
அமைந்தது
என் கல்லூரி வாழ்க்கை
இங்கு பாடம் மட்டும் கிடைப்பதில்லை
இலவச இணைப்பாய்
பாசமும் நேசமும்
கிடைக்கின்றன

நம் கண்களின் நீர் துடைக்க
கரங்கள் ஒன்று சேர்கின்றன
ஒருவன் காயம் கண்டு
பல கண்கள் கண்ணீர் விடுகின்றன
இவையெல்லாம்
நம் கல்லூரி நமக்களித்த பரிசுகள்
நம் மகிழ்ச்சியின்
மரமாய் நிற்கும் நம் கல்லூரிக்கு
நாம் என்ன செய்யப்போகிறோம்?


தேவை புது மாற்றம்
நம்மில் இருக்கு புது இரத்தம்
நான் என்பதை நாமாக்குவோம்
நாம் என்பதை நம் கல்லூரியாக்குவோம்

நாம் சாதரணமானவர்கள் இல்லை
நாம் தான்
இந்த நாட்டின் நரம்புகள் வீருக்கொள்வோம்

எதிர்காலம்
நம்மை நோக்கி கிடக்கிறது
சிந்தித்து செயல்படுவோம்
தீயென எறிவோம் நீரென விழுவோம்

சிரித்தால் சூரியன்
அழுதால் மழை
யோசிப்போம் நம்மில் தேவை மாற்றம்
வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் படிக்காமல்
மாற்றத்திற்கு ____________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக