அண்டை வீட்டுக்காரர் அமரர்.பாபுக்காக......

வாழ்க்கையின் இறுதிக் காலம் மரணம் என்பது மாறி, மரணம் எப்போது வேண்டுமானாலும் யாரையும் அழைக்கும் என்ற நிலையில் வாழ்க்கை கழிகிறது!

வழக்கம் போல நேற்றைக்கும் எனை நலம் விசாரித்த உயிர் இன்று காற்றில் கரைந்துவிட்டது (28-01-11 )

அண்டை நாட்டில் உயிர்விட்டு கொண்டிருக்கும் என் சகோதரர்களின் மரணத்தை விட, அண்டை வீட்டுக்காரரின் மரணம் வெகுவாக எனை பாதிக்கிறது!

அப்பாவை "அப்பு" என செல்லமாக அழைக்கும் அவரின் இரு குழந்தைகளும் எனைப்பார்த்து " மாமா அப்புவை எழுப்புங்க எனக்கூறி அழும் போது, நானும் இறந்து மீள்கிறேன்" அந்த ஆஸ்பத்திரி அழுகை சத்தத்தில்!

அவரைப் உயிருடன் இருக்கும் போது சரியாக பார்க்காத பார்வை இறந்த அவரது உடலின் மீது மையம் கொண்டுள்ளது!

அஞ்சலி செலுத்திவிட்டு, அவ்விடம் அகன்ற பின்னரும் மனம் தனியொரு இருட்டறையில் ஒளிந்துக்கொள்கிறது!

-வாழ்கையின் பாதையில் இருந்து மிக சீக்கிரம் ஓய்வு பெற்று, மரணமென்னும் மாயையில் கலந்த அண்டை வீட்டுக்காரர் அமரர்.பாபுக்காக........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக