"பத்மா"னந்தர்...!

காதலெனும் 
ஊடல் 
பருவமெய்தி 
காமமெனும் 
கூடல் 
மூப்பெய்தி வந்தவன்
நான்
மண்ணில் 
பிறக்கையிலே
பாதையை தொலைத்தவன்  
நான்

பால்யத்தில் 
பாசக்கரனாகவும் 
பருவத்தில்
பாவக்கரனாகவும் 
பைத்தியக்கரனாகவும்
உரு மாறியவன்
நான் 

காதலில் கயவன்
நான் 
களவியில் கடன்காரன் 
நான்

துணைத்தேடலில் 
துவண்டுபோனவன் 
நான் 
துனைவாழ்வில் 
தூர்ந்துபோனவன் 
நான் 

தகப்பநென்ற ஸ்தானமும்
தானமாய் பெற்றவன் 
நான் 

மழலையை மார்பில் 
அணைக்க மறந்து 
மண்ணில் தவிக்க விட்டவன்
நான் 

குழைந்தைதனம் மாறியதும் 
என் குமாரர்கள் 
குடும்பஸ்தர்கலாவதை 
கண்டு வெகுண்டவன் 
நான்

மனையாளின் மரணத்தால்
மாற்றான் விட்டு மல்லிகையை 
ம(ன)ணந்தவன் 
நான் 

புருசலட்சனமாய் வந்த 
பூக்கரானுக்கு 
மல்லிகையை மாற்றியவன்
நான் 

அன்பு செலுத்தப்படுபவர்களில் 
நீயும் ஒருவனாய் இருக்கலாம் 
ஆனால் நிச்சயம் 
வெருக்கபடுபவன் தான் 
நான் 

இலையுதிர்க்கால 
கிளையின் 
பழுத்த இலை நான்

முற்றும் துறந்து
வாழ கடமைப்பட்டவன் 
நான் 

வாழ்கையின் 
கடைசி காலத்தில் 
மாற்றம் மருகி 
தயங்கி வந்தது என் வாசலில் 

இன்று நான்...
பாவப்பட்ட நான் 
பாவம் தீர்ற்கும் 
புண்ணியவான் 

பாவப்பட்டவர்கள் 
எனை நாடி வருகின்றனர் 
பரமானந்தம் கிடைக்குமென்று

ஆதாமின் அன்பின் 
பயனாய் வந்தவர்கள் 
என் கால்களில் கிடக்கிறார்கள் 

ஆட்சியாளர்களும் 
ஆசிர்வாதம் வேண்டி 
என் ஆசிரமத்தில் நிற்கிறார்கள் 

ஆட்டி வைப்பவர்களில் 
ஆதவன் 
நான் 

வங்கியில் இருப்பு 
வீட்டில் கருப்பு 
என வாழும் சுகவாசி 
நான் 

"பத்மா"னந்தர்... என்பது எனது திருப்பெயர்
காவி கட்டிய கடவுள்  என்பது எனது பட்டப்பெயர்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக