மீண்டும் மழை ….!


மேகம் இருண்டு
பெய்யெனெ பெய்யும் மழை
பெண்ணவள் கண்கொள்கிறாள்
என மீதான மோக பார்வையால்
மழைச்சாரலில் நனைந்த பின்னர்
மங்கையவள் கூந்தல்
நீரதனில் நனைந்து
நினைவிழந்தேன்
இடி இடிக்கும்
சத்தத்திலெல்லாம்
முத்தமொன்றை பதித்தால்
தேகத்தில்
மின்னல்
வெட்டி மறையும் போது
நாணம் கொண்டு
நகர்ந்தருகில் வந்தால்
மழையில் நனைந்த
ஆடை ஈரம் குளிர்கிறது
என சொல்லி போர்வை கேட்டேன்
ஆடை இழக்க செய்து தீ மூட்டினால்
மேகம் மூடி கருக்கையில்
மோகம் கொண்டு – உடல்
வேகம் பெற்று
யாகம் செய்கிறால் தாக தீயில்
உடலை கொண்டு
உயிரை உயிர்ப்பிக்கும்
கலையை கற்றுக்கொள்கிறோம்
இருவரும்
பசிக்கிறது என சொல்லி
தே”நீர்” கேட்கையில்
நீர் இல்லா தேனை தந்தால்
ஈரதழின் வழியே
மழை ஓய்ந்த பின்னரும்
பெண்ணவள் மோகம்
தீராதுகண்டு திகைக்கையில்
தேன் புன்னைகையை வீசுகிறாள்
மீண்டும் மழை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக