கவிதை

கவிதை
வார்த்தைகளின்
வர்ணஜாலமல்ல
கவிதை

வாழ்க்கையின்
வைர வரிகள்
தான் கவிதை

நான் கவிதை எழுத
கற்றுக் கொண்டதே
அன்பை உணர்ந்த பிறகுதான்

என் தனிமையின்
தவமும் நீயே
தவத்தின் பலனும் நீ
பலனின் பலனும் நீ

என் நிழலும்
எனை விட்டோடும்
ஒரு ராத்திரியில்

ஆனால் எப்போதும்
நீ எனை விலகுவதில்லை
நம் வாழ்க்கை
எப்போதோ எங்கேயோ
பிணைக்கப்பட்ட ஒன்று

நம் வாழ்வின் செழிப்புக்காகவே
நான் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.....

1 கருத்து: